திருச்சியில் இன்று
3 மாத சம்பளத்தை நிறுத்தியதால் அரசு ஊழியர் தற்கொலை முயற்சி.
திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 53) இவர் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் தொழுநோய் மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அவரை புற்றுநோய் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அவரால் முழுமையாக வேலையை செய்ய இயலவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த மூன்று மாதங்களாக அவரது சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த மைக்கேல்ராஜ் இன்று அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.