திருச்சி உள்ளிட்ட தமிழக முழுவதும் உள்ள ஜி – ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை .

ஜி – ஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி ஒத்தக்கடை டேப் காம்ப்ளக்ஸில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள இருந்தனர்.
காலையில் இந்த அலுவலகம் பூட்டப்பட்டு இருந்ததால் அதிகாரிகள் காத்திருந்தனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் அதிகமாக வருமானவரித்துறை அதிகாரிகள் காத்திருந்த நிலையில் , அலுவலகம் திறக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாலு பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் குழுவினர் திருச்சி ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர் .அங்கு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது .
தமிழக ஆளுங்கட்சிக்கு சொந்தமான இந்த நிறுவனத்தில் சோதனை நடைபெற்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.