ஏப்ரல் 19 ஆம் தேதி உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணம் கல்லீரல் நோய் பற்றிய விழப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
கல்லீரல் கோளாறுகள் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என்றாலும், அந்த உறுப்பைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களிடம் பரவலாக இல்லை. இருதயம், நுரையீரல், மூளை போன்றவற்றை காப்பது போல் கல்லீரல் ஆரோக்கியம் காப்பது பற்றிய விழிப்புணர்வு இன்றளவும் குறைவாகவே இருக்கிறது.
இந்த இருள் நீங்கி அனைவரும் கல்லீரல் காக்க அதன் வழிமுறைகளும் பாதிக்க பட்டப்பின் அதற்கு தரும் சிகிச்சை பற்றியும் எடுதுறைப்பதற்காக இந்நாளை மிகவும் முக்கியமான நாளாக எங்கள் அப்போலோ மருத்துவமனை கருதுகிறது. .
இதனை முன்னிட்டு அப்போலோ மருத்துவமனையானது இன்று (20.04.2023) பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து 2 கி.மீ. தூரத்திற்கு நடைப்பயணம் மேற்கொண்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை டாக்டர். நேரு தலைவர் (திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை & கீ.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி) கொடி அசைத்து துவக்கிவைத்ததுடன் கல்லீரலின் நம்மைகள் மற்றும் அதனின் அவசியத்தை குழுமியிருந்த பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்
மேலும் கல்லீரல் நோய்களை கலையவேண்டும், இதனால் பல்வேறுநோய்கள் ஏற்படுகிறது எனவும்,
மது குடித்தல் மட்டுமின்றி உடல்பருமன், அதிக கொழுப்பு போன்றவைகளினாலும் கல்லீரலில் நோய்கள் உண்டாகிறது. இதனால் கல்லீரல் செயலிழப்பு மற்றும் மாற்று அறுவை சிகிச்சை வரை செல்லும் அபாயம் இருப்பதனால் இதனை பாதுகாப்பது இன்றியமையாதது என்றார்.
காவல்துறை துணை ஆணையர் (திருச்சி வடக்கு) அன்பு இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்திற்கு தலைமையேற்று விழாவின் இறுதியில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை மருத்துவமனை நடத்துவதின் மூலம் மக்களுக்கு பயனுள்ளது எனவும். மருத்துவமனை மற்றும் மருத்துவர்களை பாராட்டினார்.
அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் மருத்துவர் டாக்டர் குமரகுருபரன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் விஜய் கணேசன், வயிறு குடல் கல்லீரல் மருத்துவர்கள் முரளிரங்கன் மற்றும் செந்தூரன் ஆகியோர் கல்லீரலின் இயக்கம் மற்றும் ஆரோக்கியம் குறித்து பேசிய போது:-

கல்லீரல் நம் உடலில் உள்ள முக்கிய பாதுகாவலன் நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்களையும், நச்சுக்களையும் தனித்தனியே பிரித்தெடுத்து, உடலுக்கு தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றதை வெளியேற்றும் பணியை கல்லீரல் இடைவிடாமல் செய்து வருகிறது.
கல்லீரல் பாதிப்பு காரணியாக அனைவரும் அறிந்த ஒன்று மது பழக்கம். மது பழக்கம் அல்லாது பல காரணிகள் நிறைய உண்டு. ஹெபடைட்டிஸ் வைரஸ் கிருமிகள் ஏ, பி, சி, டி, இ என்று பல வகைகள் உள்ளன. இந்த வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால், கல்லீரல் அலர்ஜி அல்லது வீக்கம் உண்டாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு கல்லீரல் பாதிப்படைய வாய்ப்புகள் நிறைய உண்டு.
உடல் பருமன். இந்த அதிகப்படியான உடல் பருமன் இருப்பவர்களுக்கு கொழுப்பு உடலில் தேங்கும் அது போன்று அவை கல்லீரலில் தங்கி சேமிக்கப்படும். இவை
நாளடைவில் கொழுப்பு கல்லீரல் நோயாக மாறுகிறது.
இப்படி பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை நம் மருத்துவமனையில் சிறந்த முறையில் அளிக்கப்படுகிறது. இங்கு பல வெற்றிகரமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளும் அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களின் கல்லீரலின் செயல்பாட்டை தொடர்ந்து கவனித்து கொண்டுவர வேண்டும். எந்த பாதிப்பும் முதல் நிலையில் கண்டறிந்தால் அவர்களை சரி செய்வது மிகவும் சுலபம். ஆதலால் அரோக்கியமான வாழ்க்கை வாழ !கல்லீரல் காப்போம் ! கவலை மறப்போம்! எனக்கூறினர்.
அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் சிவம் கல்லீரல் நோய் வராமல் தடுக்க நாம் நல்ல உணவு முறை, ஆரோக்கியமான உணவு பழக்கம் கடைப்பிடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்க வேண்டும். எல்லா வயதினரும் அவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க வேண்டும் என கூறினார்.
அப்போலோ மருத்துவமனை மூத்த பொது மேலாளர் சாமுவேல் குழுமியிருந்த பொதுமக்கள் மற்றும் இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற குழைந்தை இயேசு செவிலியர் கல்லூரி,
மவுண்ட் டபுர் செவிலியர் கல்லூரி, ஜென்னிஸ் செவிலியர் கல்லூரி ஆகிய கல்லூரி மாணவர்களை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார்.
விற்பனை பிரிவு மூத்த மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன் மற்றும் சங்கீத் பொதுமேலாளர் பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினர்.