Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வினோதன் நீ பைலட் மூவியில் பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி.

0

'- Advertisement -

 

திருப்பூர் ஈஷா மீடியா தயாரிப்பில் உருவான விநோதன் நீ பைலட் மூவி வெளியிடு மற்றும் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

விநோதன் நீ பைலட் மூவியில் திருநங்கையை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. ரவுடி கூட்டம் ஒன்று ஏழ்மையில் உள்ளவர்களை மிரட்டி பிச்சை எடுக்க வைத்து பணத்தை வசூல் செய்கிறார்கள். இதை தட்டி கேட்கும் திருநங்கைக்கு ஏற்படும் பாதிப்பு அதனை தொடர்ந்து அந்த ரவுடி கூட்டதிற்க்கு என்ன நிகழ்கபோகிறது என்கிற எதிர்பார்ப்புடன் கதை இறுதி வரை நகர்கிறது.

இப்படத்தின் வெளியிட்டு நிகழ்வு திருப்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆர்.கே.குமார், திருப்பூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ரமேஷ். உதவி ஆய்வாளர் பரஞ்ஜோதி, திரைப்பட இயக்குநர் ஹரிதேவா விக்கி லேபிள்ஸ் இயக்குனர் விக்கிமாஸ் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் அகில இந்திய செயலாளர் நாராயண செல்வராஜ் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் அமைப்பின் திருப்பூர் மாவட்ட செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விநோதன் நீ பைலட் மூவி யில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்து நினைவு பரிசினை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் விநோதன் நீ படத்தில் நடித்த நடிகர்கள் கார்த்தி ஜாக்கி கோவை மீரா தர்மா திருச்சி ஆண்டனி தாமஸ் தர்மா சுருள் ராமசாமி காளிஸ்வரன் பழனிசாமி விஜய் காளியப்பன் விஜய் லோகன் அங்கமுத்து சாமி முரளிதரன் மொட்ட பருக் ஜான் விஜய் மீசை பாலா பாபு கார்த்திகேயன் மற்றும் நடிகைகள் வீரலட்சுமி திவ்யா ஜூலி எஸ்தர் ராணி மாஸ்டர் கமலேஷ் மாஸ்டர் தனுஷ் மாஸ்டர் மாறவர்மன் இசையமைப்பாளர் பாலகுமார் இயக்குநர் குமார் தங்கவேல் ஒளிப்பதிவாளர் யாசின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் புதிய உறுப்பினர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு திருப்பூர் மாவட்ட செயலாளர் ராமசாமி ஏற்பாட்டில் நடைபெற்றது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.