திருச்சி உறையூரில் வங்கி பெண் ஊழியர் திடீர் மாயம்.
திருச்சி உறையூர் குழுமணி ரோடு ஸ்டேட் பேங்க் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ட லட்சுமி .இவரது மகள் கலைவாணி (வயது 20) இவர் திருச்சி உறையூர் சாலை ரோட்டில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் லோன் பிரிவில் பணியாற்றி வருகிறார் .
நேற்று வீட்டிலிருந்து தனது தாயாரின் இருசக்கர வாகனத்தை எடுத்துவிட்டு கலைவாணி வெளியே சென்றார். ஆனால் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய அஷ்டலட்சுமி உறையூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.