Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம். அடுத்த கட்டமாக உள்ளிருப்பு போராட்டம் மாநில தலைவர் அறிவிப்பு.

0

 

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் சுமைதூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி கலெக்டர் அலுவலக அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் வீரராகவன் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் தனபாலன் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் சரவணன் மாநில பொருளாளர் பாஸ்கரன், தென் மாவட்ட செயலாளர் முனியாண்டி, மாநில அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், இணைத் தலைவர் கிருஷ்ணன்,மாநிலத் துணைத் தலைவர் தெய்வேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

உண்ணாவிரதத்தில் கடந்த 1997ம் ஆண்டு மே தினத்தில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்த பணி நிரந்தரத்திற்கு உண்டான சலுகைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சங்க அங்கீகார தேர்தலை காலதாமதம் இன்றி உடனே நடத்த வேண்டும்.
ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் புகுத்தும் ஆணையை ரத்து செய்ய வேண்டும். கூலி கேட்ட தொழிலாளிக்கு கூலி வழங்காமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பண பலன்களை உடனே வழங்க வேண்டும்.
பணி பதிவேடு அனைத்து மண்டலத்திலும் தொழிலாளர்களுக்கு சரியாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் இருந்தனர்.

இந்த போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை யென்றால் அடுத்த கட்டமாக வருகிற 24ந்தேதி தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் வீரராகவன் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.