Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

துபாயில் திருச்சி மாணவி சுகிதாவிற்கு சிறந்த இளம் திறமையாளருக்கான விருது.

0

'- Advertisement -

 

துபாயில் ஆட்டிட்யூட் அமைப்பு சார்பில் நான்காவது ஆண்டாக சேன்யோ அவர்களின் முன்னெடுப்பில் இளமையும், திறமையும் மிகுந்த பெண்களை கௌரவிக்கும் வகையில் அவர்களது திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் மகளிர் மாநாடு நேற்றைய தினம் துபாய் குவாட் மேத்தா அரங்கில் நடைபெற்றது.

இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் திறமை வந்த பெண்கள் மாநாட்டில் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக இதில் திருச்சியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவியான சுகித்தா சிலம்பத்தில் பல்வேறு உலக சாதனை நிகழ்த்தியதுடன் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

மாணவி சுகித்தாவின் திறமைகளை அங்கீகரித்து பாராட்டும் வகையில் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களிடம் சிறந்த இளம் திறமையாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தொடர்ந்து துபாயில் விருதுபெற்று விமான மூலம் திருச்சி வந்த மாணவி சுகித்தாவுக்கு சிலம்ப ஆசான் மற்றும் நண்பர்கள் கணேஷ், உறவினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த விருதை என்னைப்போல சாதனை படைக்க உள்ள பெண்களுக்கு அர்ப்பணிப்பதாகவும், தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்த இந்த விருதுகள் ஊக்கம் அளிப்பதாக இருப்பதாகவும் மாணவி சுகித்தா தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.