Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில்
சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி.

எஸ்டிபிஐ கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு தொகுதி 21-வது வார்டு தர்கா கிளை சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி கிளை தலைவர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.

TVK ad

கிழக்கு தொகுதி தலைவர் அப்துல் காதர் (பாபு) துணைத்தலைவர் வாசிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தர்கா கிளைச் செயலாளர் முபாரக் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மதர் ஜமால் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் முகமது ரபிக்,மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜீத், தளபதி அப்பாஸ்,வர்த்தக அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா, எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் காஜா மொய்னுதீன், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் முகமது சித்திக், 21-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மும்தாஜ் பேகம், திமுக 21-வது வட்டச் செயலாளர் முகமது முபாரக், எம்.எல்.எஸ். பொதுச் செயலாளர் கவிஞர் ஜாஃபர், அதிமுக இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் இலியாஸ் ,
ஜமாத் நிர்வாகிகள்,
பெண்கள்,
பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இறுதியாக தர்கா கிளை நிர்வாகி அப்பாஸ் அலி அவர்கள் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.