இன்ஜினியரிங் மாணவி காதலனுடன் ஓட்டமா?
லால்குடி அருகே உள்ள பி.கே. அக்ரஹாரம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் பிரியங்கா (வயது 19).
இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. சிவில் படித்து வந்தார்.

இந்த நிலையில் கல்லூரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் கடந்த 31ம் தேதி பிரியங்கா பெற்றோர் வீட்டிற்கு திரும்பினார். வீட்டில் பெற்றோருடன் இருந்தார்.
நேற்று காலை வீட்டிலிருந்த குப்பைகளை அருகாமையில் உள்ள குப்பைத் தொட்டியில் போடுவதற்கு சென்றார்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மாயமான மாணவி பிரியங்கா ஏற்கனவே காதல் வலையில் சிக்கி இருந்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து காதலனுடன் அவர் ஓட்டம் பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.