Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தூய வளனார் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் துறையின் சார்பில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.

0

திருச்சி தூயவளனார் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் துறையின் சார்பில் பேராசிரியர் சார்லஸ் அறக்கட்டளை சொற்பொழிவு இன்று ஜூபிலி அரங்கில் நடைபெற்றது. அறக்கட்டளை சொற்பொழிவு சீர்மிகு கல்விக்கான மின் ஆளுமை என்கிற தலைப்பிலே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் உரையாற்றினார்.

அமைச்சர் பேசுகையில், உலகிலேயே கற்பித்தலில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. கற்றல் புரட்சி நடைபெறுகிற இவ்வேளையில் அதை நிகழ்த்துகிற பொறுப்பில் கணிப்பொறி அறிவியல் துறை திகழ்கிறது. கற்றல் புரட்சி அனைவருக்குமானதாக அமைய வேண்டும். படிக்கின்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இணைய வசதி கிடைக்க மத்திய அரசு ஆவண செய்தல் வேண்டும். தமிழகத்தில் உள்ள 500 நூலகங்களை வைஃபை வசதி ஏற்படுத்தி அதன் மூலம் கற்றலை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி எடுக்கிறது. மேலும் பள்ளிக்கல்வித்துறை கற்றல் கற்பித்தலை சீர்மிகு அடிப்படையில் மேம்படுத்திட பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக ஒவ்வொரு வகுப்பறையையும் சீர்மிகு வகுப்பறையாக மாற்ற அரசு ஆவண செய்து வருகிறது. ஆகவே அரசின் இந்த முயற்சிகளுக்கு கணினி அறிவியல் மாணவர்கள் இந்த திட்டங்களுக்கு உதவ முன்வர வேண்டும் மேலும் கணினி அறிவியல் மாணவர்கள் தொழில்நுட்பத்திற்கான தூதுவர்களாக திகழ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய கல்லூரி முதல்வர் அருள் முனைவர் ஆரோக்கியசாமி சேவியர் கல்வி அமைச்சரின் பல்வேறு முயற்சிகளை பாராட்டி பேசினார். கல்லூரியின் செயலர் முனைவர் கே அமல் அமைச்சர் அவர்களுக்கு பூங்காத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

கணிப்பொறி அறிவியல் மாணவர்களுக்கான தொழில்நுட்ப போட்டிகளில் வென்ற ஒட்டு மொத்த சுழற் கோப்பையை வென்று முதலிடம் பிடித்த எம் சி எ மாணவர்களுக்கும், இரண்டாம் இடம் பிடித்த மூன்றாம் ஆண்டு கணிப்பொறி அறிவியல் மாணவர்களுக்கும் அமைச்சர் அவர்கள் கோப்பைகள் வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் இறுதியில் கணிப்பொறி அறிவியல் மன்றத்தின் துணைத் தலைவர் முனைவர் விமல் ஜெரால்டு நன்றியுரை ஆற்றினார். நன்றியுறையின் போது அமைச்சரின் சீர்மிகு முயற்சிகளை பாராட்டி அரங்கத்தில் உள்ளோர் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் துணை முதல்வர் ரவீந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணைத் தலைவர் பேராசிரியர் சார்லஸ், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜோ இருதயராஜ், முனைவர் அலாய்சியஸ் மற்றும் முனைவர் விமல் ஜெரால்ட் ஆகியோர் செய்திருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.