ஏரி,குளங்களை தனியாருக்கு ஏலம் விடுவதை நிரந்தரமாக தடை செய்யக்கோரி தண்ணீர் அமைப்பு சார்பில் திருச்சி கலெக்டரிடம் மனு.
ஏரி,குளங்கள் தனி நபருக்கு ஏலம் விடுவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்… என மாவட்ட ஆட்சியிடம் மனு.
கடந்த திங்களன்று 13.02.23 கே.சாத்தனூர் பகுதியிலுள்ள கணக்கன் குளம் ஏலம் விடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தமைக்கு நன்றி கூறுவதை, நிரந்தரமாக குளங்களை மீன் பிடிக்க ஏலம் விடுவதை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஏரி, குளங்களை உள்ள நீர் வேளாண்மைகளுக்கும், ஆடு,மாடு , பறவைகளுக்கும், மற்றும் நிலத்தடிநீர் உள்ளீட்ட சூழலை நிரந்தரமாக காத்திட ஏலம் விடுவதை நிரந்தரமாக தடை செய்து உத்தரவிட வேண்டுகிறோம்.
நீர் நிலைகளை தனிநபர் கைகளுக்குச் செல்லாமல் தடுத்து ஊரகப் பகுதிகளில் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து மீன் பிடித்திருவிழாவைப் பின்பற்றி தண்ணீர் அமைப்பு சார்பாக செயல் தலைவர் கே.சி. நீலமேகம், செயலாளர் கி.சதிஷ்குமார், துணை செயலாளர் ஆர்.கே.ராஜா, கே.கே. பாய்ஸ் குமரன், சந்துரு ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.