Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

புதிதாக திறக்கப்பட்ட அசைவ உணவுகத்தை மூட கூறி தொடர்ந்து பாஜகவினர் வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் ?

0

 

திருச்சி மலைக்கோவில் எறும்பீஸ்வரர் கோவில் கிரிவலப் பாதையில் புதிதாக கேரளா மெஸ் என்ற அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் அமைப்பதற்கு ஆரம்பத்தில் இருந்து பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும் தொடர்ச்சியாக கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனுவும் அளிக்கப்பட்டது.

நவம்பர் 28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு.👆

 

இந்நிலையில் இன்று தொல்லியல் துறையால் தடை செய்யப்பட்ட அந்த ஓட்டலை இடிக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம் அறிவித்து இருந்தனர்.
ஆனால் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.

இந்த நிலையில் திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன், மண்டல் தலைவர் ஆர்.பி.பாண்டியன், பொதுச்செயலாளர் பொன் தண்டபாணி,வடக்கு மண்டல் தலைவர் செந்தில் குமார் துணைத் தலைவர் கருணாம்பரம்,செய்தி தொடர்பாளர் இந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு மனு ஒன்றை அளித்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

தொல்லியல் துறையால் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட ரிமைண்டர் நோட்டீஸ்.

 

மலைக்கோவில் எறும்பீஸ்வரர் கோவில் கிரிவலம் பாதை அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக ஒரு அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்துக்கு மாநகராட்சி கட்டிட அனுமதி பெறப்படவில்லை. மேலும் இது தொல்லியல் துறை சார்பில் தடை செய்யப்பட்ட பகுதியாகும் ஆகவே சட்டத்திற்கு புறம்பாக திறக்கப்பட்டுள்ள அந்த அசைவ உணவகத்தை உடனடியாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனதில் கூறப்பட்டுள்ளது.

தொல்லியல் துறையால் அனுப்பப்பட்ட ஸ்டாப் நோட்டீஸ்

 

 

ஷோகேஸ் நோட்டீஸ்

1914ம் ஆண்டே கெசட்டில் ஏற்றப்பட்ட நோட்டீஸ்.

 

பின்னர் பாஜக நிர்வாகி ஒருவர் கூறும்போது : எங்கள் கட்சியின் மனுவின் மீது மாவட்ட நிர்வாகம் தயங்குவதற்கு காரணம் திருச்சி மாவட்ட அமைச்சர்கள் தலையீடு தான் என கூறப்படுகிறது.முதலில் திருவெறு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழி மூலம் இல்ல உணவகத்தை திறக்க முயற்சி செய்தனர் ஆனால் பாஜகவின் தொடர் போராட்டத்தால் உணவு திறக்க முடியவில்லை இதனால் அந்த உணவகத்தினர் திமுக வட்ட செயலாளர் திருவானைகோயில் ஜனா மூலம் அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருன் நேருவின் ஆலோசனையின் படி இந்த மெஸ் திறக்கப்பட்டுள்ளது.எனவே தான் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.