சி.ஐ.டி.யு. தரைக்கடை வியாபாரிகள் மனு அளிக்கும் போராட்டம்.
திருச்சி மாநகர் சி.ஐ.டி.யூ. தரைக்கடை தள்ளுவண்டி, மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் இன்று(திங்கட்கிழமை) மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கெடுப்பு நடத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும்.
வென்டிங் கமிட்டி ஆலோசனைகளை பெற்று கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்.
வெண்டிங் கமிட்டி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். சட்டத்திற்கு விரோதமாக தரைக்கடைகளை அப்புறப்படுத்துவதை தடுக்க வேண்டும்.
கந்துவட்டி கொடுமையில் இருந்து சாலையோர வியாபாரிகள் விடுபட கூட்டுறவு வங்கி மூலம் ரூ.15,000 வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தரைக்கடை சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.
சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ரங்கராஜன், திருச்சி மாவட்ட தரைக்கடை சங்க செயலாளர் செல்வி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர் .இதில் சுரேஷ், அப்துல்லா, நத்தர் அலி, சுப்புரத்தினம், ஷேக் மொய்தீன், புஷ்பாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.