திருச்சியில் இரண்டு கடைகளில் ரூ.1.50 லட்சம் பொருட்கள் திருட்டு.
திருச்சி கள்ளர் தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல்.இவரது மகன் சக்திவேல் (வயது 22) இவர் அந்த பகுதியில் பிரிண்டர்ஸ் கடை நடத்தி வந்து சம்பவத்தன்று கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இது குறித்து சக்திவேல் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதேபோன்று திருச்சி பீமநகர் கணபதி நகரை சேர்ந்தவர் முகமது சூரக் (வயது47) இவர் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் யாரோ கடையில் இருந்த காப்பாளர் வயர் மற்றும் இரும்பு தட்டுகள் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து முகமது சுருக் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கண்ட இரண்டு கடைகளில் மொத்தம் ரூபாய் 1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டுப் போய் உள்ளது.