திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக்கு சிறப்பு விருது.
கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார்.
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, ஜமால் முகமது கல்லூரி நாட்டு
நலப்பணித் திட்டம் மற்றும் காவல் துறையினர் இணைந்து மாபெரும் பார்வை
இழப்பு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடத்தினர்,
இதனை
திருச்சி போலிஸ் கமிஷ்னர் சத்ய பிரியா
தொடங்கிவைத்தார். இந்த வீதிநாடகம் திருச்சி மாவட்டத்தில் முக்கிய இடங்களில்
இந்த வாரம் முழுவதும் நடைபெற்றது.
இத்தெருக்கூத்து நாடகத்தில் சர்க்கரை நோயினால் கண்களில் ஏற்படும்
விழித்திரை தொடர்பான நோய்கள், கண்புரை, மாறுகண் மற்றும் கண்நீர் அழுத்தம்
போன்ற நோய்கள் குறித்தும் இதனால் ஏற்படும் பார்வை இழப்பை தடுப்பது என்பது
குறித்தும் மக்களுக்கு நடித்து காண்பிக்கப்பட்டது.
இவ்விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகத்தை கே.கே. நகர், மத்திய பேருந்து
நிலையம், டி.வி.எஸ். டோல்கேட், மன்னார்புரம், இரயில் நிலையம், வெஸ்டரி பள்ளி
அருகில், சத்திரம் பேருந்து நிலையம், மெயின்கார்ட்கேட் மற்றும் பாலக்கரை
போன்ற பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நடைப்பெற்றது.
இதில் பல்லாயிர
கணக்கான மக்கள் பங்குப்பெற்று கண் சம்பந்தமான நோய்கள் மற்றும்
சிகிச்சைகளைக் குறித்தும் தெரிந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சி நிறைவு நிகழ்ச்சியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் நிறைவு பெற்றது.தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜோசப் கண் மருத்துவமனைக்கு டாக்டர் பிரதீப் குமார் விருதினை ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரதீபாவிடம் வழங்கினார்,
- இவ்விழிப்புணர்வுக்கான ஏற்பாடுகளை ஜோசப் கண்மருத்துவமனை நிர்வாக
அலுவலர் சுபாபிரபு சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்