திருச்சி எக்ஸ்பிரஸ் செய்தியால் பொதுமக்களுக்கு நல்ல சாலை கிடைத்தது.தமிழ் புலிகள் கட்சியின் திருச்சி மண்டல செயலாளர் ரமணா.
திருச்சி எக்ஸ்பிரஸ் மின் இதழுக்கு நன்றி தெரிவித்து தமிழ் புலிகள் கட்சியின் திருச்சி மண்டல செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 8.2.2023 அன்று திருச்சி உறையூர் பழைய வார்டு 59, புதிய வார்டு 9 ல் மேற்கு சட்டமன்ற உறுப்பினரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் திமுக முதல் அமைச்சர் நேருவின் அலுவலகம் அருகில் போடப்பட்ட தார் சாலைகள் தரமற்ற உள்ளதால்சிறுவர்களுடன் முதியவர்களும் கீழே விழுந்து காயங்களுடன் செல்கின்றன எனது கூறியிருந்தோம்.
மேலும் மாநகராட்சி நிர்வாகமும், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவும் இதை கண்டு கொள்ளவே இல்லை என நாங்கள் கூறியிருந்ததை நீங்கள் செய்தியாக வெளியிட்டு இருந்தீர்கள்.
இதன் எதிரொலியாக நேற்று (9.2.2023) உடனடியாக பழைய சாலைகள் நீக்கப்பட்டு புதியதாக தரமான தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.தாங்கள் செய்தி வெளியிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழ் புலிகள் கட்சியின் சார்பாகவும்,இப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும் திருச்சி எக்ஸ்பிரஸ் மின் இதழுக்கும்,மற்றும் உடனடியாக பணியை தொடங்க செய்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும்/ அமைச்சர் கே.என்.நேருவுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்