Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சூர்யா சிவா என்னிடம் மன்னிப்பு கேட்டார்.வரிச்சூர் செல்வம் பேட்டி.

0

'- Advertisement -

 

என் மீது ஒரே நாளில் ஐந்து ஸ்டேஷனில் 22 வழக்குகள் பதிவு செய்கின்றனர்.எதற்கு என்றே தெரியவில்லை.
வரிச்சூர் செல்வம் பேட்டி.

கொடைக்கானல் டூர் போனேன். அங்க ஒரு குண்டாஸ். வாழ்நாட்களில் ரொம்ப கஷ்டப்பட்டாச்சு. சாப்பாட்டுக்குக் கூட இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டாச்சு.

வடிவேல் ஒரு படத்துல ‘நானும் ரவுடிதான்’ என்பார். அதே மாதிரி நான் ரவுடி இல்லைன்னு சொல்றேன். இயற்கையிலேயே எனக்கு சம்பாத்தியம் இருக்கிறது. நல்லா காசு வைத்திருக்கிறேன். நான் ஏன் போய் ரவுடிசம் பண்ணனும். யார்கிட்டயும் காசு வாங்க வேண்டும் என்று தேவையில்லை. நான் எப்பவுமே ட்ரெஸ்ஸிங் இப்படித்தான் போடுவேன். என்கிட்ட நிறைய வாட்ச் இருக்கு. ஷூ, கண்ணாடி நிறைய இருக்கு. நான் ஒரு ஜாலியானவன். என்னை ரவுடி என்று சொல்வதை முதலில் நிப்பாட்டுங்க.

என்னைக்காவது யார்கிட்டயாவது போய் நான் மிரட்டி ஒரு பத்து ரூபாய் வாங்கிருக்கேன்னு சொல்லுங்க. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கேன்னு என்னைக்காவது சொல்லி இருக்காங்களா?

நான் பார்க் போவேன். 100 பேரு என் கூட போட்டோ எடுப்பாங்க. அங்கிட்டு ஒரு நட நடப்பேன். இங்கிட்டு ஒரு நட நடப்பேன். ஹோட்டலில் போய் சாப்பிடுவேன். நான் ஜாலியா தான் இருக்கேன். அப்புறம் ஏன் என்னை தாதா, ரவுடின்னு போட்டு சித்திரவதை படுத்துகிறீர்கள்.

என்னை ஜாலிமேன்னு போடுங்க. ஜோக்கர்னு கூட போடுங்க, நான் ஏற்றுக்கொள்கிறேன், தப்பு கிடையாது. ரவுடி என்பதை தயவு செய்து எடுத்து விடுங்கள்.

நான் காதல் செய்து கொண்டிருக்கிறேன். ஜாலியா இருக்கிறேன். எல்லாத்தையும் காதலிக்கிறேன். உங்களையும் காதலிக்கிறேன். இந்த மக்கள் எல்லாத்தையும் காதலிக்கிறேன். நான் ஒரு பப்புக்கு போறேன். நான்கு நடிகர்கள் வந்து என்கூட போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். பாவம் அந்த காயத்ரி ரகுராம். ஒரு நாள் ஓட்டலில் சாப்பிடுவதற்காக போனேன். மாஸ்டர் கணேஷ், ஒரு ஐந்து ஆறு பேர் வந்திருந்தார்கள். வந்தபோது என் கூட போட்டோ எடுத்துக் கொண்டார்கள். அவ்வளவுதான்.

அப்புறம் திருச்சி சூர்யாகிட்ட பேசினேன். அவர் என்கிட்ட சாரி கேட்டாரு. நான் தெரியாமல் பதிவு போட்டுவிட்டேன் என்றார். ஏப்பா இப்படி எல்லாம் போடலாமா? அந்த பொண்ணு யாருன்னே தெரியாது. போட்டோ தான் எடுத்தது. இது குற்றமாய்யா. அவங்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது சாமி. அரசியல்வாதிக்கும் எனக்கும் ரொம்ப தூரம்” என கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.