நாளை திருமணம்,
திருச்சி ஜவுளி கடையில் மணப்பெண் திடீர் மாயம்.காதலனுடன் ஓட்டமா?
திருமண வீட்டார் அதிர்ச்சி.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அக்ரகாரம் விஷ்ணம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 60)இவரது மகள் வைஷ்ணவி (வயது 26).
இன்ஜினியரிங் முடித்துள்ள இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் பெற்றோர் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தனர் இந்த திருமணம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெற இருந்தது.
இந்த நிலையில் நேற்று கார்த்திக்கேயன் மற்றும் குடும்பத்தினர் வைஷ்ணவியை அழைத்துக் கொண்டு திருச்சியில் உள்ள ஜவுளி கடைக்கு துணி எடுப்பதற்காக வந்தனர் அப்போது வைஷ்ணவி பாத்ரூம் சென்று வருவதாக உறவினர்களிடம் கூறிச் சென்றார்.
பின்னர் வெகு நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் உள்ளிட்ட உறவினர்கள் வைஷ்ணவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
நாளைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் மணப்பெண் ஜவுளிக்கடையில் மாயமான சம்பவம் ஜவுளி கடையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
பின்னர் இது தொடர்பாக கார்த்திகேயன் கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தனியார் கல்லூரியில் பணியாற்றிய போது காதலில் விழுந்து காதலனுடன் மாயம் ஆனாரா? அல்லது.யாராவது கடத்தி சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் மணமகளை தேடி வருகின்றனர்.