Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்படும் ரக்ஷா மந்திரி விருதை வென்ற திருச்சி மாணவி ஜென்னி பிரான்ஸினாவுக்கு குவியும் பாராட்டுக்கள்.

0

 

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்படும் ரக்ஷா மந்திரி விருதை 12 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார் திருச்சி மாணவி வி.ஏ. ஜென்னி ப்ரெஸின்னா தேசிய மாணவர் படையினர் காண உள்பிரிவு ஐ யூ சி உள் குடும்ப போட்டி ஐசிசி ஆகியவற்றில் சிறப்பிடம் பெற்று சிறந்த அதிகாரிகளுக்கான பட்டத்தை வென்றார்

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவியான இவர் தேசிய மாணவர் படையின் கேட் கீழ் அதிகாரியாக சி யு இந்த விருதை வென்றுள்ளார்.

பசுமை இயக்கம் பெண் சிசுக்கொலை பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் கொடுமைகள் மற்றும் கருக்கலைப்புக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான அதிக பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

 

மத்திய அரசின் இந்த விருதை பெற்ற திருச்சியைச் சேர்ந்த மாணவி ஜென்னி பிரான்ஸினா அவர்களுக்கு இந்த விருதை மத்திய பாதுகாப்பு படை அமைச்சர் ராஜநாத் சிங் வழங்கினார். திருச்சியைச் சார்ந்த மாணவியை கன்மலை அறக்கட்டளையின் தலைவர் வில்பட் எடிசன், தண்ணீர் அமைப்பின் இணை செயலாளர் ஆர்.கே. ராஜா,அக்னி சிறகுகள் அமைப்பின் தலைவர் மகேந்திரன், கன்மலை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் லூயிஸ் மற்றும் அலெக்ஸ், SVDMkj தென்னிந்திய வாகன ஓட்டுனர் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் ஜோ ஆகியோர் கலந்துக்கொண்டு மாணவிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

மாணவி ஜென்னி பிரான்ஸினா புத்தூர் சிந்தாமணி கூட்டுறவு மேலாளர் ஜீசஸ், கேம்பியன் பள்ளி ஆசிரியை லீமா ஆகியோரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.