Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஏரோஸ்கேட்டோபால் தேசிய விளையாட்டுப் போட்டியில் சாம்பியன்ஷிப் வேன்ற தமிழக அணிக்கு திருச்சியில் சிறப்பான வரவேற்பு.

0

'- Advertisement -

Ad banner

ஏரோஸ்கேட்டோபால் தேசிய விளையாட்டு போட்டியில்
சாம்பியன்ஷிப் வென்று தமிழ்நாடு அணி சாதனை.

வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் இன்று உற்சாக வரவேற்பு.

தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள்,பெண்கள் பிரிவு என மொத்தம் ஆறு பிரிவுகளில் தமிழ்நாடு ஸ்கேட்டிங் அணியினர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில்
எட்டாம் ஆண்டு தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் ஜனவரி 28 மற்றும் 29ஆம் தேதி நடைபெற்றது,

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ராஜஸ்தான், கேரளா, குஜராத் என
பத்துக்கும் அதிகமான மாநிலங்கள் பங்கு கொண்ட இந்த தேசிய விளையாட்டு போட்டியில்,
தமிழ்நாடு ஏரோஸ் கேட்டோபால் சங்கத் தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் தலைமையில், பொதுச் செயலாளர் பிரவீன் ஜான்சன் மற்றும் பொருளாளர் தங்க முருகன் மேற்பார்வையில் திருச்சி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், மதுரை, தர்மபுரி என பல மாவட்டங்களில் இருந்து 17 பெண்கள், 57 ஆண்கள் என மொத்தம் 74 ஸ்கேட்டிங் வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாடு அணையில் விளையாடினர்.


10 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவு, 14 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவு, 14 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள், பெண்கள் பிரிவு என மொத்தம் ஆறு பிரிவுகளில், தமிழ்நாடு ஸ்கேட்டிங் அணியினர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளனர்.
மேலும் பல மாநிலங்கள் பங்கு பெற்ற இந்த தேசிய விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்த தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழ்நாடு அணியினர் வென்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றிக்கு பெரிதும் துணை நின்ற பயிற்சியாளர்கள் அபுதாஹீர், அருள் பிரகாஷ், அமல் ஜோயல், வினோத் மற்றும் பொறுப்பாளர்கள் யோகா, ஸ்வர்ணா, கார்த்திகேயன் மற்றும் வீரர்கள், வீராங்கனைகள் என

அனைவரையும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்று, இனிப்புகள் வழங்கி பாராட்டி மகிழ்ந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.