திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜூனியர் ஹேண்ட்பால் போட்டி.மத்திய பிரதேசம், அரியானா இணைந்து கோப்பையை வென்றது.


திருச்சியில் நடந்த தேசிய ஜூனியர் கைப்பந்து (ஹெண்ட்பால்) போட்டியில் மத்தியப்பிரதேசம், அரியானா அணிகள் இணைந்து கோப்பை வென்றன.
திருச்சி எஸ்பிஐஓஏ பள்ளியில் 44வது தேசிய ஜூனியர் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் மத்தியபிரதேசம், அரியானா அணிகள் சமமான
புள்ளிகள் பெற்றதால் கலைஞர் கருணாநிதி கோப்பையை இணைந்து கைப்பற்றினார்.
எஸ்பிஐஓஏ கல்வி அறக்கட்டளை கோப்பையை டில்லி அணியும், 3வது இடத்தை சந்தானம் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி சார்பில் வழங்கப்பட்ட கோப்பையை தமிழகமும் கைப்பற்றின.தமிழக அணி 10 வருடங்களுக்கு பின்பு மூன்றாவது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கோப்பை மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்திய கைப்பந்து கூட்டமைப்பு பொது செயலாளர் பிரித்பால்சிங் சலுஜா, சென்னை எஸ்பிஐஓ கல்வி அறக்கட்டளை தலைவர் நல்லபெருமாள் பிள்ளை, திருச்சி எஸ்பிஐஓஏ பள்ளியின் தாளாளர் ஸ்ரீ கணபதி சுப்ரமணியம், தமிழக கைப்பந்து செயல் தலைவர் ஸ்டான்லி வினோத் விக்னேஷ்வரன், பொது செயலாளர் கருணகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

