திருச்சி: டீக்கடையில் பங்குதாராக சேர்ப்பதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி வாலிபர் கைது. தாய், சகோதரி.மனைவி மீது வழக்கு பதிவு.
திருச்சியில்
டீக்கடையில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ. 25 லட்சம் மோசடி
வாலிபர் கைது;
தாய், மனைவி, சகோதரி மீது வழக்கு.
திருச்சி அருகே உள்ள மல்லியம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 44). இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அந்த பணத்தினை வங்கியில் போட்டு வைத்திருந்தார்.
இந்த நிலையில் குமரவேல் வங்கியில் பணம் போட்டு வைத்திருப்பதை அறிந்து கொண்ட அந்தப் பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்த உறையூர் லிங்கா நகர் பகுதியைச் கிருஷ்ணகுமார் (வயது 29) அவரை சந்தித்தனர்.
ஏற்கனவே குமரவேலுக்கு கிருஷ்ணகுமார் அறிமுகம் ஆகி இருந்ததால் தனது சிரமங்களை கூறினார்.
ரூ.25 மாற்றிய வங்கி சலான்
அப்போது கிருஷ்ணகுமார் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அருகாமையில் ஐயங்கார் டீக்கடை ஒன்று ரூ. 34 லட்சத்துக்கு விற்பனைக்கு உள்ளது. இதனை ஆளுக்கு ரூ. 17 லட்சம் செலுத்தி எடுத்து நடத்துவோம். அனைத்து செலவுகளும் போக தினமும் ஆளுக்கு ரூ.2500 வரை லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்.
இதற்கிடையே குமரவேல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின்னர் அடுத்த சில மாதங்களில்
கிருஷ்ணகுமாரின் தந்தை செல்வராஜ் திடீரென இறந்து விட்டார். அதைத்தொடர்ந்து கிருஷ்ணகுமார் மீண்டும் தனது தாய் விஜயா, மனைவி மற்றும் சகோதரியை அழைத்துக் கொண்டு குமரவேலை சந்தித்தனர். அப்போது தங்களிடம் ரூ.17 லட்சம் முதலீடு செய்ய இப்போது பணம் இல்லை. நீங்கள் ரூ. 25 லட்சம் கொடுத்தால் அதற்குரிய லாபத்தை சேர்த்து தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய குமரவேல் நாச்சி குறிச்சி வங்கியில்
டெபாசிட் செய்திருந்த ரூ. 25 லட்சம் பணத்தை கிருஷ்ணகுமார் மற்றும் அவரது நண்பர் ஒருவரது வங்கி கணக்குக்கு 2019 அன்று அனுப்பி வைத்தார். அதன் பின்னர் கிருஷ்ணகுமார் டீக்கடையை எடுத்து நடத்தினார். பத்து நாட்கள் குமரவேல் டீக்கடைக்கு சென்று வந்தார். அப்போது கொரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணம் காட்டி எந்த பணமும் அவருக்கு கொடுக்கப்படவில்லை.
அதன் பின்னரும் தற்போது வரை தினசரி லாபத் தொகை கொடுக்காமல் குமரவேலை ஏமாற்றினர்.
முதலீடு செய்த தொகையும் கைக்கு திரும்ப வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த குமரவேல் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகுமாரை இன்று கைது செய்தனர். மேலும் அவரது தாய் விஜயா ,மனைவி மற்றும் சகோதரி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.