குழந்தைகளின் தனித்திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள்.தனலட்சுமி பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பேச்சு.
பெற்றோர்கள் குழந்தைகளின் தனித்திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள்,
திருச்சி
தனலட்சுமி பள்ளி ஆண்டு விழாவில் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பேச்சு.
திருச்சி உறையூரில் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் முதலாவது கிண்டர் கார்டன் பட்டமளிப்பு மற்றும் 11-வது ஆண்டு விழா கொண்டாட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அ. சீனிவாசன் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு பட்டங்கள் வழங்கியும் ,2022 -23 கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் -2 வகுப்பு வரை முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், எஸ். எஸ். எல்.சி., பிளஸ் 1, பிளஸ் -2 வகுப்புகளில் அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் கேடயங்கள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது;-
பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகள் மீது உங்களது விருப்பத்தை திணிக்காதீர்கள். அன்பால் மட்டுமே யாரையும் ஆள முடியும். அதிகாரத்தால் அடக்கி ஆள்வது கடினம். குறிப்பாக பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள்.
இன்றைய குழந்தைகளின் அறிவாற்றல் பிரகாசமாக இருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை இருக்கிறது. அதனை கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள். வழிநடத்துங்கள்
என்றார்.
முன்னதாக பள்ளியின் துணை முதல்வர் சதீஷ்குமார் வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியை ஏ சில்வியா 2022 23ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். மேலும் விழாவில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம், அறிவியல், வணிகவியல், பொருளியல்,கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
விழாவில் ஆசிரியர்கள் திரளான பெற்றோர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். விழாவில் பள்ளி குழந்தைகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.