
திருச்சி உறையூரில்
குடிக்கு அடிமையான வாலிபர் தூக்கு போட்டு சாவு.
திருச்சி உறையூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரன். இவரது மகன் அன்பரசு (வயது 32). குடிபோதைக்கு அடிமையானவர். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, மனைவியின் சேலையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது குறித்து அவரது மனைவி மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

