
அன்பில் அறக்கட்டளையின் சார்பாக , மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம்.
திருச்சி அரியமங்கலம் சேஷாயி தொழில்நுட்ப பயிலகம் (SIT) பாலிடெக்னிக் கல்லூரியில் மறு சனிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் டாடா கேப்பிட்டல்,பேடிஎம், ஏர்டெல்,டிவிஎஸ் ட்ரெயினிங் சர்வீசஸ், டார்லிங்,
ஐ எப் பி, காவேரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்குபெற உள்ள இவ்வேளை வாய்ப்பு முகாமில் தகுதியுள்ள நபர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கு உரிய வேலைகளை பெற்றுக் கொள்ள அன்போடு அழைக்கின்றேன்
என திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்.பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான
அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

