எம்ஜிஆரின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து நிர்வாகிகளும் திரளாக பங்கேற்க அதிமுக எம்ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கழக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவரும்,முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க
தங்கமணி அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி
அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு
(17.01.2023) நாளை காலை 10.05 மணிக்கு திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பாக கோர்ட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் அண்ணா சிலை அருகிலும் அன்னதானம் நடைபெற உள்ளது.
12 மணி அளவில் புத்தூர் விழி இழந்தோர் பள்ளியிலும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நிர்வாகிகள், மற்றும் வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என திருச்சி முன்னாள் துணை மேயரும் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளருமான சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை.