எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழாவில் அனைவரும் திரளாக பங்கேற்க முன்னாள் அரசு தலைமை கொறடாவும்,அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளருமான ஆர்.மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் அவர்களின் 106 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
திருச்சி கோர்ட் அருகில் உள்ள எம்ஜிஆர் அவர்களின் திருவருச் சிலைக்கு நாளை காலை 10 மணி அளவில்
எனது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
அது சமயம் மாநில,மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள்,ஒன்றிய கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள்,மகளிரணி நிர்வாகிகள்,வட்ட கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக நிர்வாகிகள்,பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோன் என மனோகரன் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.