திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் குறித்து மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை.
திருச்சியில் நாளை எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் குறித்து திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக நிறுவனத்தலைவர், எம்ஜிஆர் அவர்களின் 106-ம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை 17.01.2023 அன்று திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கீழ்கண்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள்….
காலை 8.45 மணிக்கு, திருவெறும்பூர், அரியமங்கலம் பகுதி கழகம், 43.வது வட்ட கழகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. எம்ஜிஆரின் திருவருசலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காலை 10.00 மணிக்கு மணப்பாறை தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் கல்பாளையத்தான்பட்டியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
காலை 10.45 மணிக்கு மணப்பாறை நகர கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அன்னதானம் வழங்கப்படவுள்ளது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள கழக நிர்வாகிகள் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் மாவட்ட கழகத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழகங்களிலும், கிளை கழக மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணிகள் சார்ந்த நிர்வாகிகள், புரட்சித்தலைவரின் சிலைகளுக்கும், புகைப்படங்களுக்கும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி ஏழரை எளிய மக்களுக்கு இனிப்புகள் வழங்கியது, அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களிலும் கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் பங்கேற்க வேண்டுமா என்று கேட்டுக்கொள்கிறோம் என திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தெரிவித்துள்ளார்.