Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வருகை தந்த ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டப் போவதாக தகவல் பரவியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு.

0

'- Advertisement -

திருச்சி வருகை தந்த ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டப் போவதாக தகவல் பரவியதால் போலீசார் குவிப்பு.பலத்த பாதுகாப்பு.

Ad banner

தஞ்சை மாவட்டம், திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்தின கீர்த்தனை நாளை காலை நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 5.45 மணியளவில் திருச்சி வந்தார்.

 

அவரை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து விமான நிலையத்தில் நேரம் ஓய்வெடுத்த பின்னர் கவர்னர் காரில், தஞ்சை புறப்பட்டு சென்றார். நேற்று சட்டசபையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இன்று திருச்சி வரும் ஆளுநருக்கு தமிழ் அமைப்பினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக ஏற்பட்ட தகவலால் கவர்னர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தை சுற்றிலும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

மேலும், விமான நிலையத்திலிருந்து இருந்து தஞ்சை வரை பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டடுள்ளது

.மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் மேற்பார்வையில் திருச்சி,தஞ்சை மாவட்டங்களில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.