விபத்தில் இறந்த வயதான பெண்.
நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்.
திருச்சி சோமரசம் பேட்டை பிரதான சாலை அருகே உள்ள காளிமார்க் சோடா கம்பெனி எதிரில் கிழக்காக வயதான பெண் சாலையில் இடதுபுறம் நடந்து செல்லும் போது அதே திசையில் பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டுநர் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து வயதான பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் உயிரிழந்துள்ளார்.
சாலை விபத்தில் இறந்தவர் ஐந்து அடி உயரம் மாநிறம் கொண்டவர். வெள்ளை கலரில் கத்தரிப்பு கலர் டிசைன் போட்ட சேலையும் அரக்கு கலர் ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். மேற்படி நபர் பெயர் விலாசம் தெரியாதவராகவும் உடலை உரிமை கோரவும் யாரும் வராத நிலையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
உரிமை கோரப்படாத பிரேதத்தை நல்லடக்கம் செய்வதற்காக சோமரசம்பேட்டை காவலர் மனோ அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் செல்வராஜ், காவலர் மனோ முன்னிலையில் இறந்த வயதான பெண்ணுக்கு யோகா ஆசிரியர் விஜயகுமார் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.