திருச்சி அரியமங்கலத்தில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் மயக்கம்.தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்….
திருச்சி அரியமங்கலத்தில்
இருசக்கரவாகனம் மோதி முதியவர் படுகாயம் .
மயக்க நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
திருச்சி அரியமங்கலம் அமலாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று இரவு சாலையை கடக்க முயன்றார். அப்போது இரு சக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் விபத்துக்குள்ளான முதியவர் படுகாயம் அடைந்தார் .அவரை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மயக்கமுற்ற நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து அடையாளம் தெரியவில்லை.
இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்- 9498156215.