திருச்சியில் இன்று
54 பயணிகளுடன் சொகுசு பஸ் கவிழ்ந்து
4 பேர் படுகாயமடைந்தனர்.
தனியார் சொகுசு பேருந்து ஒன்று 54 பயணிகளுடன் . இன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற போது மணிகண்டம் அருகே இந்த பஸ் வந்துள்ளது. அப்போது சாலையில் பஸ்சை டிரைவர் திருப்ப முயன்றுள்ளார். இதில் அவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் பஸ்சில் இருந்து 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்த போது பேருந்து சாலை பராமரிப்பு இல்லாததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது தெரியவந்துள்ளது
தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அஜாக்கிரதை காரணமாகவே தொடர் விபத்து நடந்து வருகிறது.
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆலம்பட்டி ரோடு பகுதியில் பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை
மணிகண்டம் அருகே உள்ள கள்ளிக்குடி புதிய மார்க்கெட் கட்டிடம்
அருகே சர்வீஸ் சாலை அமைக்கப்படாததால்
பேருந்துகள் அடிக்கடி கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.