Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் நாளை மின்தடை.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை.

திருச்சி மாவட்டத்தில் நாளை (7-12-2022) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்சி நகரிய கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (புதன் கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடப்பதால், அந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVK ad

அதன்படி, காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மின் தடை ஏற்படும் என்று திருச்சி நகரிய செயற்பொறியாளர் பா.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மின்தடை பகுதிகள்:

ஜான்தோப்பு, பாரதியாா் தெரு, கார்கில் நகர், மலைக்கோட்டை, கீழ ஆண்டார்வீதி, தஞ்சாவூர் குலத் தெரு, சின்னக் கடைவீதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.