கல்லூரி,கோயில் அருகே மனமகிழ் மன்றம்,அசைவ உணவகம்.தடை செய்ய வேண்டி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் மனு.
திருச்சியில் கல்லூரி அருகே மனமகிழ் மன்றம் மற்றும் கோயில் அருகே அசைவ உணவகம் தடை செய்ய வேண்டி பாஜகவினர் மனு.
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பாஜகவினர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் இரண்டு மனுக்கள் அளித்தனர் அதில் கூறியிருப்பதாவது:-
புத்தூர் நால்ரோடு, ஈ.வே.ரா சாலையில் ஸ்மோக் ரெஸ்டாரென்ட் (Smoke Restaurant) உள்ள கட்டிடத்தின் 3வது மாடியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக்கூட கேளிக்கை விடுதி தொடங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த இடமானது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் உள்ளது. ஒருவழி பாதையான ஈ.வே.ரா சாலையில், கல்லூரிக்கு அருகாமையில் அமையவுள்ள இது போன்ற மதுபானக்கூட கேளிக்கை விடுதியினால் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும் மற்றும் வெளிநாடுகளை போல் கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்த வழிவகுக்கும். ஆகவே ஐயா அவர்கள் தலையிட்டு மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை சீரழிக்கக்கூடிய மதுபானக்கூட கேளிக்கை விடுதி தொடங்குவதை அனுமதிக்காமல் தடைசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மற்றொரு மனுவில் கூறியிருப்பதாவது:

புராதன பெருமை வாய்ந்த திருவெறும்பூர் நகரில், பழம் பெருமை வாய்ந்த நால்வரால் பாடல்
பெற்ற ஸ்தலமாக திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் திகழ்கின்றது. இந்த புகழ் பெற்ற ஸ்தலம்
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. மாதம் இருமுறை சிவனடியார்களால் பிரதோஷ
வழிபாடும், பௌர்ணமி தோரும் சிறப்பாக கிரிவலமும் நடைபெறுகின்றது. வருடம் ஒருமுறை
விமர்சையாக வைகாசி திருவிழாவை ஒட்டி நடைபெறும் தேரோட்டத்தின், தேரோடும் வீதியின் அருகில்
மாநகராட்சியின் 40வது வார்டில் மலையடிவாரத்தின் 20மீட்டர் எல்லைக்குள் கேரளா மெஸ் என்கிற
பெயரில் ஒரு அசைவ உணவகம் மாநகராட்சி மற்றும் தொல்லியல் துறையினரிடம் அனுமதி பெறாமல்அமைய ஏற்படாகி வருகிறது.
இந்த அசைவ உணவகம் பசு மாட்டிறைச்சி உணவிற்கு பிரசித்தி பெற்ற ஓர் உணவகம். கிரிவலப்பாதையின் மிக அருகில், தேரோடும் வீதியின் அண்மையில் அமையப்பெரும் இந்த அசைவ உணவகத்தால் ஆன்மீக பெரியோர்கள் மற்றும் சிவ பக்தர்களிடம் மிக கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொல்லியல் துறையின் Buffer Zone பகுதியில், இதை தொல்லியல் துறையும், மாநகராட்சி நிர்வாகமும் எப்படி அனுமதித்தது என்கிற கேள்வி பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் எழுந்துள்ளது. மேலும் இந்த விஷயம் இந்துமத பக்தர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளை புண்படுத்தும் தன்மையுடையதால் மத மோதலாகி சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆகையால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இரும்புகரம் கொண்டு முளையிலேயே இந்த பிரச்சனையை தீர்த்து, நிரந்தரமாக இந்த அசைவ உணவகம் தொடங்கப்படுவதை தடை செய்யப்பட வேண்டும் என அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.