திருச்சி பைபாஸ் சாலை ஒர
மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய முதியவர்.
திருச்சி பைபாஸ் சாலையில் பால் பண்ணை சர்வீஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அருகில் உள்ள மரத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக வரகனேரி கிராம நிர்வாக அதிகாரி சூசை ஆரோக்கியராஜ் காந்தி மார்க்கெட் போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் காந்தி மார்க்கெட் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது பைபாஸ் சாலையில் உள்ள ஒரு மரத்தில் கேபிள் வயர் மற்றும் வேட்டியால் தூக்கில் தொங்கிய ஆண் பிணத்தை கண்டு, அந்த பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. முதல் கட்ட விசாரணையில் அவர் அப்பகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததாக தெரியவந்துள்ளது. அதன் பெயரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.