திருச்சி மணிகண்டம் ஒன்றிய பாஜக தெற்கு மற்றும் வடக்கு மண்டல் சார்பில் சாலையை சீரமைக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
பாஜக மணிகண்டம் ஒன்றிய தெற்கு, வடக்கு மண்டல் சார்பில் ராம்ஜிநகர் பஞ்சு மில்லில் இருந்து புங்கனூர் வழியாக அல்லித் துறை வரை செல்லும் பிரதான சாலையை சீரமைக்க கோரி ராம்ஜி நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டதிற்கு மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மண்டல் தலைவர்கள் டிசிம்.ராஜா, சிவமூர்த்தி, பரமசிவம், ராஜேஸ் முன்னிலை வகித்தனர்.

பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன், இளைஞர் அணி மாநில தலைவர் ரமேஷ் சிவா, மாவட்ட பொது செயலாளர்கள் ஒண்டிமுத்து, காளீஸ்வரன், பொருளாளர் செல்லதுரை, துணை தலைவர் தண்டபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
மண்டல் பொது செயலாளர்கள் நாகராஜ், மகாதேவன், வார்டு தலைவர் பிராட்டியூர் விஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மண்டல் பொது செயலாளர் குமார் வரவேற்றார். முடிவில் மண்டல் பொது செயலாளர் லெட்சுமணன் நன்றி கூறினார்.