இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் கோரி முதல்வரிடம் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக தலைவர் இடி முரசு இஸ்மாயில் மனு.
இறந்தவர்களை அடக்கம் செய்ய தமிழக முதல்வரிடம் இடம் கேட்ட இஸ்லாமியர்கள்.
திருச்சி திருவெறும்பூர் பாப்பாக்குறிச்சியில் இன்று பள்ளி மாணவர்களுக்கான வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இதனை தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் பெரம்பலூருக்கு புறப்பட்டு சென்ற அவருக்கு அரியமங்கலம் சோதனை சாவடி பகுதியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, திருச்சி வடக்கு காட்டூர் பாப்பா குறிச்சி ரோடு அர் ரகுமான் மஸ்ஜித் பள்ளிவாசல் அமைப்பின் நிர்வாகிகள், முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக தலைவர், பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் திருச்சி திருவெறும்பூர் காட்டூர் பகுதியில் இஸ்லாமிய மக்கள் 500 குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம். இங்குள்ள அனைவரும் மிகவும் ஏழை மக்கள். எங்களில் இறப்பவர்களை அடக்கம் செய்திட கபர்ஸ்தான் ( மையவாடி) இல்லை.எனவே தாங்கள் எங்களுக்கு அரசு சார்பில் கபர்ஸ்தானுக்கு இடம் வழங்க வேண்டும் என கூறி இருந்தனர்.
இது முரசு இஸ்மாயில் மனு அளித்த போது அப் பள்ளிவாசல் தலைவர் சையது உஸ்மான், செயலாளர் ஹைதர் அலி,மாவட்ட துணைச் செயலாளர் முகமது இக்பால், இளைஞரணி தலைவர் மஜீத் மற்றும் பலர் உடன் இருந்தனர்.