திருச்சியில் பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜக சார்பில் 18 இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
பால் விலை , மின் கட்டண உயர்வை கண்டித்து
திருச்சியில் 18 இடங்களில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம்.
மாவட்டத் தலைவர் ராஜசேகரன் பங்கேற்பு.
தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு அண்மையில் அமலுக்கு வந்தது. ஆவின் நிறுவனத்தின் பிரீமியம் அல்லது ஆரஞ்சு பாக்கெட் பால், ஒரு லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டது.
இந்த இதற்கு
பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில்,
பால் விலை உயர்வு , மின் கட்டண உயர்வு, சொத்து உயர்வை கண்டித்து பாஜகவினர் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக
திருச்சி அண்ணா சிலை,
திருவெறும்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதேபோல் திருச்சி மாநகர் மாவட்டம் உறையூர் மண்டல் சார்பில் தில்லை நகர் மெயின் ரோட்டில் மண்டல தலைவர் எஸ் ஆர் ராஜேஷ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜசேகரன், மாவட்ட பொதுச் செயலாளர் காளீஸ்வரன் நிர்வாகிகள் மகேந்திரன், ஸ்ரீராம் சுந்தர், சக்திவேல், கிரிதரன் ,வினோதா,
ஓ.பி.சி.அணி மாவட்ட தலைவர் அழகேசன், பொருளாளர் செல்வதுரை, மாவட்ட செயலாளர் நாகேந்திரன், மண்டல் பொதுச்செயலாளர் ராஜ்குமார் மற்றும்
தாரகேஸ்வரி, சுகுமாரி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று திருச்சி பாலக்கரை மண்டல் சார்பில் திருச்சி தஞ்சை ரோடு சூலக்கரை மாரியம்மன் கோவில் அருகில் மண்டல் தலைவர் மல்லி செல்வராஜ் தலைமையில் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜன் முன்னிலையிலும் ,
தென்னூர்மண்டல் சார்பில் அரச மரத்தடி பகுதியில் மண்டல் தலைவர் பரஞ்சோதி தலைமையிலும், திருவரம்பூரில் நகர்மன்ற தலைவர் ஆர் பி பாண்டியன் தலைமையில் மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் இந்திரன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் அரியமங்கலம் மண்டல் சார்பில் மண்டல் தலைவர் சண்முக வடிவேல் தலைமையிலும், மலைக்கோட்டை மண்டல் சார்பில் அண்ணா சிலை பகுதியில் மண்டல் தலைவர் அரவிந்த் பிரசாத் தலைமையிலும்,
பீமநகரில் மண்டல் தலைவர் புருஷோத்தமன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் அந்தநல்லூர் வடக்கு, தெற்கு, மணிகண்டம் வடக்கு தெற்கு,
கண்டோன்மென்ட், பொன்மலை, உள்ளிட்ட 18 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமான திரளாக கலந்து கொண்டனர்.