Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொதுமக்கள் பிரச்சினைக்காக மேயரை எதிர்த்து மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ்

0

 

 

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து திமுக கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ் வெளிநடப்பால் பரபரப்பு.

இன்று திருச்சி மாநகராட்சி அவசர கூட்டம் முதலில் நடந்தது. இதை தொடர்ந்து சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலரும், நகரமைப்புக்குழு தலைவருமான கொட்டப்பட்டு தர்மராஜ் பேசுகையில்,

எனது வார்டுக்கு உள்பட்ட ரஞ்சிதபுரம் பகுதியில் உள்ள ரதிமீனா பார்சல் சர்வீஸ்  சாலையில் கனரக வாகனங்களை நடத்துவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது.மேலும் 48 வது வார்டில்  ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது.. இதில் நமக்கு (மாநகராட்சிக்கு) சொந்தமான இடத்தை அளந்து ஆக்கிரமிப்பினை அகற்ற வேண்டும்.  இதற்க்கு தாங்கள் (மேயர் அன்பழகன்) டேப் எடுத்துக்கொண்டு வீடு வீடாக சென்று அளந்து பார்த்து சொல்லுங்கள் எனக் கூறினீர்கள் .இது நக்கலான பதிலாக நான் பார்க்கிறேன்.இப்போது நீங்கள் அதிகாரியை அனுப்புங்கள் என கோபமாக கூறினார். அதற்கு மேயர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை. கட்சி கூட்டத்தில் பேசியதை மன்றத்தில் பேசுவதும், மன்றத்தில் பேசுவதை கட்சிக் கூட்டத்தில் பேசுவதும் தவறான நடைமுறை என சமாளித்தார்.

இதைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் ஆளுங்கட்சி உறுப்பினரே திமுக மேயரை எதிர்த்து வெளிநடப்பு செய்தது மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

கொட்டப்பட்டு தர்மராஜ், (மேலப்புதூர் அன்பு ) அன்பழகன் இருவரும் 1987இல் ஒரே நாளில் திமுகவின் இளைஞர் அணி உறுப்பினர் அட்டை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.