Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பள்ளி குழந்தைகளுக்கு அன்சைஸ் இலவச காலணிகள். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அலட்சியம். மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார் அறிக்கை.

பள்ளி குழந்தைகளுக்கு அன்சைஸ் இலவச காலண

0

பள்ளி குழந்தைகளுக்கு அன்சைஸ் இலவச காலணிகள்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அலட்சியம்.

இலவசம் என்றாலே கொடுத்ததை வாங்கிகொள்ள தான் வேண்டுமா….? அதை எதிர்த்து கேள்வி கேட்ககூடாது என்ற மனநிலையில் தாய் தமிழக மக்கள். ஆனால் அந்த இலவச பொருளே நமது வரிபணத்திலிருந்து தான் அரசு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட கொடுக்கிறது என்பதை நாம் சிந்திக்க மறந்துவிடுகிறோம்.

இப்படியான சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது.

அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலணிகளை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இது ஒரு நல்ல திட்டம். ஆனால் இந்த திட்டம் சரியாக ஆய்வு செய்யப்படாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு, பண்ணிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அணிவது போன்றதொரு காலணி வழங்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறான சம்பவம் அங்கொன்றும், இங்கொன்றும் இல்லை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சி மாவட்டத்தில் தான் பரவலாக உள்ளது என்ற குற்றச்சாட்டுள்ளது.

மேலும் திருச்சி பாலக்கரையில் படிக்கும் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அக்குழந்தையின் தாயார் கால் சைசுக்கு இலவச காலணி அக்குழந்தைக்கு வழங்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.

எனவே திருச்சி மாவட்ட கல்விதுறையின் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களாலும், சுட்டி காட்டவேண்டிய சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களின் அலட்சியத்தாலும் ஒரு நல்ல நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட ஒரு திட்டம், அந்த நோக்கம் நிறைவேறாமல் போகிறது.

இவ்வாறான சம்பவங்களால் தமிழக அரசுக்கு தான் கெட்டப்பெயர் என்பதை உணர்பவர்கள் உணவர்களா…???

என மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட வக்கீல்.S.R.கிஷோர்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.