உருது பள்ளிகளின்
ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
அமைச்சரிடம் கோரிக்கை .
திருச்சி
வருகை தந்த தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தானை முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
தமிழகத்தில் மீட்கப்படாமல் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை உடனடியாக மீட்க வேண்டும். அதேபோன்று உருது பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. அந்தக் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
பள்ளிவாசல்களில் வேலை செய்யும் உலமாக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். மேலும் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டினை மூன்றரை சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த ஆவன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
மனு அளித்த போது மாநில மாணவரணி ஆரிபுல்லா, மாவட்ட துணைச் செயலாளர் முகமது இக்பால் ஆகியோர் உடன் இருந்தனர்.