Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அல்லூர் சீனிவாசன் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக எஃப்.ஐ.ஆர் பதிவு.மாவட்ட எஸ்பி முன்னிலையில் வாக்குமூலம்.

0

'- Advertisement -

 

காழ்ப்புணர்ச்சி காரணமாக
சமூக ஆர்வலர் – பத்திரிகையாளர் சங்கத் தலைவர் அல்லூர் சீனிவாசன் மீது பொய் வழக்கை ரத்து செய்ய கோரிக்கை. ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கைவும் எடுக்க வலியுறுத்தல்.

காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக ஆர்வலரும், பத்திரிகையாளர் சங்கத் தலைவருமான அல்லூர் சீனிவாசன் கூறினார்.

இது பற்றிய விபரம் வருமாறு :

சமூக ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளர் சங்கத் தலைவராக இருந்து வருபவர் அல்லூர் சீனிவாசன்.

இவர் மீது கடந்த 24.09.2022 அன்று அல்லூர் ஊராட்சி தலைவராக இருந்து வரும் கே.விஜயேந்திரன் என்பவர் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அதில், தனது பெரிய மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி 2019-ம் வருடம் பிப்ரவரி மாதம் ரூ. 5 லட்சம் பேரம் பேசி, முன் பணமாக ரூ. 3 லட்சத்தை 2 பேர் முன்னிலையில் அல்லூர் சீனிவாசன் வாங்கியதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு வேலை வாங்கி தரவில்லை என்று பணத்தை திருப்பிக் கொடு என்று கேட்டதாகவும், அதற்கு உன் தலையை எடுத்து விடுவேன் என்று அல்லூர் சீனிவாசன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கடந்த 22.09.2022 அன்று கூறியுள்ளார்.

மேலும், அல்லூரை சேர்ந்த சித்திர கோனார் என்பவர் மகனான இன்னொரு சீனிவாசன் மூலம் பலருக்கும் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து அவர்களிடமிருந்து ஆர்.சி. புக்கை வாங்கி வைத்துக் கொண்டு கந்து வட்டி தொழில் செய்து வருகிறார் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஜீயபுரம் போலீஸ் சார்பில் அல்லூர் சீனிவாசன் மீது பண மோசடி தொடர்பாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டது.

எந்தவித விசாரணையுமின்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு 26.09.2022 அன்று ஜீயபுரம் காவல் நிலையத்தில் ஆஜராக சொல்லி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து 26-ம் தேதி திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவரை (ஐ.ஜி) அவரது சுப்பிரமணியபுரம் அலுவலகத்தில் அல்லூர் சீனிவாசன் நேரில் சந்தித்து, தன் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளதாக கூறி அதற்குரிய விளக்கத்தை அளித்தார். ரூ. 3 லட்சம் பணம் வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்த தேதியில் தான் அல்லூரில் இல்லை என்றும், சென்னையில் இருந்ததாகவும் விளக்கம் அளித்தார்.

காழ்ப்புணர்ச்சி காரணமாகவே
தன் மீது பொய் வழக்கு
புனையப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் போலீஸ் ஐ.ஜி.யிடம் தன் தரப்பு விளக்கத்தை அளித்தார்.

இதையடுத்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தினால் நேர்மையான விசாரணையாக அது இருக்காது என்று அல்லூர் சீனிவாசன் வலியுறுத்தியதை தொடர்ந்து, மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீஸ் எஸ்.பி. முன்னிலையில் கூடுதல் டி.எஸ்.பி. குற்றாலிங்கம் 01.10.2022 அன்று விசாரணை நடத்தினார்.

அவரிடம் அல்லூர் சீனிவாசன் தனது வாக்கு மூலத்தை பதிவு செய்தார். எந்தவித விசாரணையும் நடத்தாமல் எப்.ஐ.ஆர். பதிவு செய்ததை பத்திரிகைகளோ ஊடகங்களோ கண்டிக்காமல் தன்னைப் பற்றி பொய்ச் செய்தி வெளியிடுவதில் மட்டும் முனைப்பு காட்டுவது ஏன்? என்று அல்லூர் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது முழுக்க முழுக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்பட்ட பொய் வழக்கு என்றும், இது தொடர்பாக ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு பின்னணியில் கார்ப்பரேட் முதலாளிகளும், பத்திரிகை ஊடக முதலாளிகளும் இருப்பதாக தெரிவித்தார். நான் வட்டித் தொழில் செய்பவன் அல்ல. யாருக்கும் நான் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பறிக்கவும் இல்லை. இது முழுக்க முழுக்க பொய் வழக்காகும். இதை நான் சட்ட ரீதியாக சந்திக்கத் தயார் என்றும் பத்திரிகையாளர்களிடம் அல்லூர் சீனிவாசன் கூறினார்.

 

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.