இதயத்தில் துளை ஏற்பட்டு
அபாய கட்டத்துக்கு சென்ற முதியவரின் உயிரைக் காப்பாற்றிய அப்போலோ டாக்டர்கள்.
தஞ்சையைச் சேர்ந்த 65 முதியவர் ஒருவருக்கு கடந்த ஆகஸ்டு முதல் வாரத்தில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதை யடுத்து அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
டாக்டர்கள் ஆஞ்சியோ செய்து கொள்ள பரிந்துரை செய்தனர். ஆனால் பயத்தின் காரணமாக அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் தொடர்ச்சியாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பின்னர் மூர்ச்சையாகி விழுந்துவிட்டார்.
பின்னர் நடத்தப்பட்ட எக்கோ பரிசோதனையில் அவரது இதயத்தை சுற்றி இரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது.
அவரின் உடல்நிலை மோசமான நிலையில் திருச்சி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீரக பாதிப்பு
சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிறுநீர் வெளியேற்றம் குறைவாக இருந்தது. மேலும் மிட்ரல்
வால்வில் கசிவு இருந்ததும் கண்டறியப்பட்டது.
இதனால் அந்த முதியவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உருவானது.

ஆனால் சிறுநீரகங்களில் பாதிப்பு, வயது முதிர்வு என பல சவால்கள் இருந்தன. இருந்த போதிலும் இதய நோய் நிபுணர் குழுவினர் அவசர அவசரமாக இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இதய ரத்தக் குழாய்கள் சரி செய்யப்பட்டு போதிய ஆக்சிஜன் கிடைக்கவும், இதயம் சீராக ரத்தத்தை பம்ப் செய்யவும் வழி செய்யப்பட்டது.
அன்னுலோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் மிட்ரல் வால்வுகள் சரி செய்யப்பட்டு கசிவு தடுக்கப்பட்டது. துளையும் அடைக்கப்பட்டது.
சுமார் 5 மணி நேரம் இந்த ஆப்ரேஷன் நடந்தது.
இரண்டு வாரங்களுக்கு பின்னர் இயல்பு வாழ்க்கைக்கு அவர் திரும்பி உள்ளார்.
இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை மதுரை மண்டல முதன்மை இயக்க அலுவலர் நீல கண்ணன்
கூறும்போது ,
மாரடைப்பு ஏற்பட்ட 3 வாரங்களுக்குள் முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் இரத்த பின் சுற்றோட்டம், ரத்தக் குழாயில் துளை, இரத்த கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளன. இதில் ஃப்ரீ வால் ரப்சர் எனப்படும் இதயத்தில் துளை ஏற்படும் நிலை அரிதானது. இது உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியது. இதயத்தில் துளை ஏற்படுவதால் தொடர்ச்சியாக ரத்தம் வெளியேறி இதயம் செயலிழக்கும் அபாயம் உள்ளது.
இப்படிப்பட்ட மோசமான உடல் நிலையில் அனுமதிக்கப்பட்ட 65 வயது முதியவரை எங்களது மருத்துவ குழுவினர் பிழைக்க வைத்துள்ளனர். அவரும் மன வலிமையுடன் இருந்தார்.
இந்த நோயாளியை சென்னை உள்ளிட்ட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் திருப்பி அனுப்பி உள்ளனர் என தெரிவித்தார்.
இதய அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் ஸ்ரீகாந்த் பூமணா, அரவிந்த், மயக்கவியல் நிபுணர்கள் ரோகிணி, சரவணன், டாக்டர்கள் காதர் சாகிப், ரவீந்திரன், சாம் சுந்தர் ஆகியோரை திருச்சி அப்போலோ மூத்த பொது மேலாளர் சாமுவேல் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் துணைப் பொது மேலாளர் சங்கீத் ராமமூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.