Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்:திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம்.போலீஸ் கமிஷனர் அறிவிப்பு.

0

'- Advertisement -

விநாயகர் சிலை ஊர்வலம்:

திருச்சி மாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம்.
போலீஸ் கமிஷனர் அறிவிப்பு.

திருச்சி மாநகரத்தில் காவிரி ஆற்றில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை முன்னிட்டு
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வாகனப் போக்குவரத்தில் மாற்றம்செய்யப்படுவதாக காவல் ஆணையர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

திருச்சி
மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில்
போக்குவரத்து நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை
குறைக்கும் பொருட்டும், விழா காலங்களில் போக்குவரத்து பொதுமக்களுக்கு
இடையூறின்றி சீராக இயங்கவும், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
திருச்சி மாநகரத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை முன்னிட்டு
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நாளை(2ந் தேதி)
மாலை 2மணிமுதல் நாளை மறுநாள் (3-ந்தேதி )காலை 6 மணிவரை கீழ்கண்டவாறு
வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

1. துறையூர், அரியலுார், பெரம்பலூர் மற்றும் கடலூர் ஆகிய மார்க்கத்திலிருந்து
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் நெ.1டோல்கேட்டிலிருந்து சென்னை பைபாஸ்ரோடு வழியாக பழைய பால்பண்ணை
ரவுண்டானா, டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்திரையர் சிலை, எம் ஜி ஆர் சிலை, அண்ணாநகர் புதுபாலம், சாஸ்திரி ரோடு, கே.டி.தியேட்டர் ஜங்சன், கரூர் பைபாஸ்
வழியாக சத்திரம் பேருந்து நிலையம் அடைந்து, பயணிகளை இறக்கி, ஏற்றி பின்னர்,
கரூர் பைபாஸ் ரோடு, கே.டி. ஜங்சன், சாஸ்திரி ரோடு, அண்ணாநகர் புதுபாலம், எம்.ஜி.ஆர்
சிலை வழியாக மீண்டும் வந்த வழியில் திரும்பி செல்ல வேண்டும்.

2. இலால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லுர் மற்றும் வாத்தலை ஆகிய
பகுதிகளிலிருந்து வரும் நகர பேருந்துகள் அனைத்தும் புதிய கொள்ளிடம் பாலம்,
சோதனைச்சாவடி எண்.6, திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, திருவானைக்கோவில்
சந்திப்பு, ஜே. ஏ.சி.கார்னர் வழியாக ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் வந்து
பயணிகளை இறக்கி, ஏற்றி பின்னர் இராஜகோபுரம், காந்தி ரோடு, திருவானைக்கோவில்
சந்திப்பு, திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, சோதனைச்சாவடி எண்.6, புதிய
கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும்.

3. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் நகரப்பேருந்துகள்
அனைத்தும் மெயின்கார்டுகேட், மேலப்புலிவார்டுரோடு, வெல்லமண்டி, நெல்பேட்டை,
தர்பார்மேடு, பால்பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ் ரோடு, ஒய் ரோடு சந்திப்பு,
காவல் சோதனை சாவடி எண்-6, டிரங்க்ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, காந்தி
ரோடு, ஜே. ஏ.சி.கார்னர், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் அடைந்து பயணிகளை
இறக்கி, ஏற்றி மீண்டும் – இராஜகோபுரம், காந்தி ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு ,டிரங்க் ரோடு, சோதனைச்சாவடி
“திருவானைக்கோவில்
ன் 6, ஒய் ரோடுசந்திப்பு
சென்னை பைபாஸ் ரோடு, பால்பண்ணை ரவுண்டானா, டி.வி.எஸ். டோல்கேட், தலைமை
தபால் நிலையம், முத்தரையர் சிலை, எம்.ஜி.ஆர். சிலை, அண்ணாநகர் புதுப்பாலம், சாஸ்திரி
ரோடு, கே.டி.சந்திப்பு, மேரிஸ் மேம்பாலம், காந்திசிலை, கல்லூரி சாலை வழியாக
சத்திரம் பேருந்து நிலையம் வரவேண்டும்.

4. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவெறும்பூர், துவாக்குடி செல்லும்
நகரப்பேருந்துகள் அனைத்தும் மெயின்கார்டுகேட், மேலப்புலிவார்டுரோடு, வெல்லமண்டி,
நெல்பேட்டை, தர்பார்மேடு, பால்பண்ணை ரவுண்டானா, வழியாக திருவெறும்பூர்,
துவாக்குடி சென்று மீண்டும் பால்பண்ணை ரவுண்டானா, டி.வி.எஸ். டோல்கேட், தலைமை
தபால் நிலையம், முத்திரையர் சிலை, எம். ஜி. ஆர். சிலை, அண்ணாநகர் புதுபாலம், சாஸ்திரி
ரோடு, கே.டி. ஜங்சன், மாரிஸ் மேம்பாலம், காந்தி சிலை, கல்லூரி சாலை வழியாக
சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வரவேண்டும்.

5. கோயம்புத்தூர், கரூர் மார்க்கத்திலிருந்து தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை
செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் குளித்தலை காவேரிப்
பாலத்தில் திருப்பி விடப்பட்டு, முசிறி, நெ.1 டோல்கேட், சென்னை பைபாஸ் சாலை,
டோல்கேட்
பால்பண்ணை, டி.வி.எஸ்.
ரவுண்டானா வழியாக தஞ்சாவூருக்கும்,
புதுக்கோட்டைக்கும் செல்ல வேண்டும்.

6. தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து கரூர் செல்லும் சரக்கு மற்றும்
கனரக வாகனங்கள் அனைத்தும் பால்பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ்ரோடு,
காவேரி பாலம், நெ.1 டோல்கேட், வழியாக முசிறி, குளித்தலை சென்று அங்கிருந்து
கரூர் செல்ல வேண்டும்.

வாகன போக்குவரத்து
விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை முன்னிட்டு
நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வாகனப் போக்குவரத்து வழிதடங்களில் மேற்கண்டவாறு
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்தை கடைபிடித்து,
சீராக போக்குவரத்து இயங்க பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.
இவ்வாறு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.