அரபு நாட்டில் வேலை வாங்கித் தருவதாக
வாலிபர்களிடம் ரூ. 2 லட்சம் ஆன்லைன் மோசடி
ஈரோடு பட்டதாரி இளைஞர் கைது.
திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் (வயது 30). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் வெளிநாடு வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். பின்னர் ராமநாதபுரம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் சீனிவாசனையும் வெளிநாட்டு வேலைக்கு அந்த வெப்சைட்டில் விண்ணப்பிக்க செய்தார்.
இதை எடுத்து வேலை வாங்கி தருவதாக போலி வெப்சைட்டில் தகவல் வெளியிட்ட ஈரோடு மாவட்டம் பெரிய செட்டிபாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த வினோத் கண்ணன் வேலை கேட்டு விண்ணப்பித்த கர்ணன் மற்றும் சீனிவாசனை தொடர்பு கொண்டு முன்பணம் செலுத்தக் கூறியுள்ளார்.
உடனே கர்ணன் ரூ . ஒன்றரை லட்சமும், சீனிவாசன் ரூ 50,000 அவரது வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் வினோத் செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார். மேலும் சிம் கார்டை தூக்கி எறிந்து விட்டு தலைமறைவானார்.
இது பற்றி பாதிக்கப்பட்ட இருவரும் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் அன்பு மற்றும் போலீசார் இமெயில் ஐடி மூலம் வினோத் கண்ணனை கண்காணித்து கைது செய்தனர்.
ரூ 15 லட்சம்
கைதான வினோத்தின் வங்கிக் கணக்கை சோதனைத்தபோது ரூ. 15 லட்சம் வரை அவரின் வங்கி கணக்கில் வரவாகியுள்ளது தெரியவந்தது.
ஆகவே வேறு பலரும் அவரிடம் பணம் செலுத்தி ஏமாந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. கைதான ரவி கேட்டரிங் முடித்துள்ளார்.
கம்ப்யூட்டர் நுணுக்கங்களை கற்றுக் கொண்டு மோசடியில் இறங்கி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.