Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் டிசைன் ஓவிய பள்ளி சார்பில் 3 நாட்கள் ஓவியக் கண்காட்சி. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

0

திருச்சியில் சுதந்திர சிறகுகள்
சுவாசத்தின் சுவடுகள்
ஓவியக் கண்காட்சி.

டிசைன் ஓவிய பள்ளி சார்பில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு
சுதந்திர சிறகுகள்
சுவாசத்தின் சுவடுகள் தலைப்பில்
ஓவியக் கண்காட்சி
திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் செளபாக்யா அரங்கில்
ஆகஸ்ட் 13,14,15 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.


கண்காட்சியினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
துவங்கி வைத்தார்.

சுதந்திர சிறகுகள்
சுவாசத்தின் சுவடுகள் தலைப்பில்
38 மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் 4 ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.அதில் ஒரு ஓவியம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த ஓவியம் ஆகும்.

சுதந்திரப் போராட்ட வீரர்களில் வேலு நாச்சியார், பகத்சிங், திருப்பூர் குமரன், கட்டபொம்மன்,
வ.உ. சி.சிதம்பரம் பிள்ளை, திப்புசுல்தான், தீரன் சின்னமலை, கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சுப்ரமணிய பாரதியார், மருதநாயக பிள்ளை, ஊமைத்துறை, சித்தரஞ்சன் தாஸ், பண்டிட் ஜவஹர்லால் நேரு, ராணி லட்சுமி பாய், மாதாங்கிணி ஹஜ்ரா, குன்வர் சிங், அஞ்சலை அம்மாள், புலித் தேவர், அழகு முத்துக்கோன், மருதுபாண்டியர், பால கங்கார திலக், மங்கள் பாண்டே, சரோஜினி நாயுடு, விபின் சந்திர பால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், லாலா லஜபதி ராய், சர்தார் வல்லபாய் படேல், நானா சாகேப் உள்ளிட்டோர் ஓவியத்துடன் மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றினை 75 ஓவியங்களை ஒரே ஓவியமாக காட்சிப்படுத்தியிருந்தனர்.

கண்காட்சியில் 140 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.

ஓவியக்கலையானது பல்வேறு ஆக்கத்திறன்களை, ஆவணப்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறை ஆகும். ஓவியங்கள், இயற்கையானவையாகவோ, ஒரு பொருளைப்போல வரையப்பட்டவையாகவோ, நிழற்படத்தை ஒத்தவையாகவோ, பண்பியல் தன்மை கொண்டனவாகவோ இருக்கலாம். அத்துடன் இவை ஒரு செய்தியை விளக்கும் உள்ளடக்கம் கொண்டவையாக, குறியீட்டுத் தன்மை கொண்டனவாக, உணர்ச்சி பூர்வமானவையாக அல்லது அரசியல் சார்ந்தவையாகக்கூட இருக்கக்கூடும்.

ஓவிய வரலாற்றின் பெரும்பகுதியில் சமூகம் சார்ந்த எண்ணக்கருக்களும், அழகூட்டல்களும் முதன்மை பெறுகின்றன. இத்தகைய ஓவியங்களை
பல்வேறு வகையான
எண்ணெய் ஓவியம்
(Oil painting) ,
வண்ணக்கோல்
(Pastel painting) ,
செயற்கை வண்ணக் கூழ்மங்கள்
(Acrylic painting),
நீர்வர்ண ஓவியம்
(Watercolor painting),
மை ஓவியங்கள்
(Ink Painting),
பூச்சு ஓவியங்கள் (Enamel painting)
என
வண்ண
கலவை பகுதியில் கருத்தியல் மற்றும் ஆக்கபூர்வமான யோசனைகளின் செறிவினை மாணவர்கள் காட்சிப் படுத்தி இருந்தனர்.

திருச்சி மாநகராட்சி துணை மேயர்,
மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தலைவர் மதிவாணன்,48வது வார்டு கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ்,கேகே நகர் தொகுதி செயலாளர் மோகன், கல்விக்குழுத்தலைவர் பொற்கொடி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

பரிசளிப்பு விழாவில்
தேசிய விருது பெற்ற ஓவியர் விசுவம் ,பத்மஸ்ரீ தாமோதரன், ஓவியர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்று பரிசளிக்கிறார்கள்.

ஓவியக் கண்காட்சி ஏற்பாட்டினை டிசைன் ஓவியப் பள்ளியின் நிர்வாக இயக்குனர் மதன், முதல்வர் நஸ்ரத் பேகம் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.