Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு கலந்துகொண்ட தமிழ் தாய் வாழ்த்து, தேசிய கீதம் இல்லாத அரசு நிகழ்ச்சி.

0

'- Advertisement -

 

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 25 ஆவது வார்டு வயலூர் சாலை, உய்யக்கொண்டான் பாலம் அருகில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 225 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார்,
மேற்கு தாசில்தார் ஷேக் முஜிபூப், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் முத்துச்செல்வம்,
நாகராஜ் உள்பட பலர் உள்ளனர்.

மாநில அமைச்சர்,ஐஏஎஸ் அதிகாரிகள்,அரசு உயர் அதிகாரிகள்,
மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த அரசு விழாவில் முறைப்படி தமிழ்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் பாட வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில்,

அமைச்சர் கே.என். நேரு கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன் தமிழ் தாய் வாழ்த்தும் பாடப்படவில்லை,நிகழ்ச்சி முடிந்த பின்பும் தேசிய கீதமும் பாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி நடந்த அரங்கம் முன்பு கட்சி சார்பில் அமைச்சரை வரவேற்று விளம்பர பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது.
இதனைக் கண்ட பொதுமக்கள் இது அரசு நிகழ்ச்சியா அல்லது திமுகவின் கட்சி நிகழ்ச்சியா? என புலம்பியவாறு சென்றனர்.

நேற்று காட்டூரில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்தும், தேசிய கீதம் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.