தமிழகத்தின் கூடுதல் தலைமைச் செயலகம் திருச்சியில் அமைக்க ம நீ ம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் வேண்டுகோள்.

தமிழகத்தின் கூடுதல் தலைமை செயலகம் திருச்சியில் அமைக்கவேண்டும்”
மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு செயலாளர் வழக்கறிஞர் கிஷோர்குமார் வேண்டுகோள் .
ஆங்கிலேயர் நம் நாட்டை விட்டு சென்று நூற்றாண்டை நோக்கி செல்கிறோம். ஆனால் அந்த ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பல கட்டிடங்களில் தான் இன்னமும் பல அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு மிக முக்கிய உதாரணம் சென்னை ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையிலுள்ள தலைமை செயலக கட்டிடம். இந்த பழமையான கட்டிடம் தற்பொழுதைய கால சூழ்நிலையில் போதுமானதாக இல்லை என்ற காரணத்தினால் தான் கடந்த 2006-2011 ஆம் ஆண்டு கால திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலத்தில் தமிழக அரசின் “புதிய தலைமை செயலகம்” ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பெரும் பொருட்செலவில் மக்கள் வரிபணத்தில் ஏற்படுத்தபட்டதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதற்கு பிறகு வந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட ஈகோ காரணமாக அந்த கட்டிடம் பொது மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
மேலும் தற்பொழுதைய காலகட்டத்தில் தமிழக அரசின் நிர்வாக வசதிக்காக அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய புதிய தலைமை செயலகம் காலத்தின் கட்டாயம் ஆகும்.
அந்த புதிய தலைமை செயக கட்டிடம் ஏன் தமிழகத்தின் இதய பகுதியான திருச்சியில் அமைக்ககூடாது….?
மேலும் திருச்சி மாநிலத்தின் மய்ய பகுதி என்பது மட்டுமல்லாமல் மாநில அரசிற்கு சொந்தமான பல நூறு ஏக்கர் நிலம் அரசிடம் இருப்பது மட்டுமேல்லாது, அறிவியல் பூர்வமாக ஆக சிறந்த நகரம் திருச்சி மாநகரம் ஆகும்.
மேலும் தமிழகத்தில் உயர் நீதிமன்ற கிளை மதுரையில் அமைக்கப்பட்டது எப்படி சாத்தியமோ. உச்ச நீதிமன்றத்தின் கிளையை தென் தமிழகத்தின் அதுவும் குறிப்பாக சென்னையில் ஏற்படுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சமிபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களுக்கு கோரிக்கை எப்படி சாத்தியமோ. அதே போன்று திருச்சியில் தமிழக அரசின் நிர்வாக வசதிக்காக கூடுதல் தலைமை செயலகம் சாத்தியம்ஆகும். இந்த கோரிக்கையையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.
எனவே தமிழக முதல்வர் அவர்கள் எதிர்கால தமிழகத்தின் நிர்வாக வசதிக்காக தமிழகத்தின் இதய பகுதியான திருச்சியில் “கூடுதல் தலைமை செயலகத்தை” அமைத்து வரலாற்று ரீதியான முடிவை எடுக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
என மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கிஷோர்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.

