திருச்சியை சேர்ந்த கௌதம் நாகராஜன். பாஜக இளைஞர் அணி மாவட்ட தலைவராக இருந்து தற்போது பாஜகவின் மாநில இளைஞரணி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கௌதம் திருச்சி பாரதிய ஜனதா கட்சியில் சிறு வயது முதல் கிளை தலைவர்,வார்டு தலைவர், இளைஞரணி மண்டலத் தலைவர் மாவட்ட இளைஞரணி தலைவர் என பல பதவிகளிலும் சிறப்பாக பணியாற்றியதன் மூலம் இந்த மாநில பொறுப்பினை பெற்றுள்ளார்.
திருச்சியில் பல்வேறு மக்கள் நல பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இவர் கட்சி பணியில் மாநில அளவில் சிறப்பாக செயல்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மாநில பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட உடன்மாநில தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
இவர் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களின் அன்புக்கு உரியவர்.அவரையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
விரைவில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற உள்ளார்.
கௌதம் நாகராஜன் மேன்மேலும் பல பதவிகள் பெற்று மக்கள் பணியாற்ற பொதுமக்களும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.