Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக பிரதீப் குமார் நியமனம்.

0

'- Advertisement -

Ad banner

தமிழகத்தின் முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக பிரதீப் குமார் நியமனம்.

மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமை செயலராக இருந்த பணீந்திர ரெட்டி தமிழகத்தின் புதிய உள்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்துறை செயலராக இருந்த எஸ்.கே பிரபாகர் வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் தமிழகத்தின் முந்தைய ஆட்சியில் சுகாதாரத்துறை செயலராகவும் தற்போதைய ஆட்சியில் மருத்துவத்துறை செயலராகவும் பணிபுரிந்து வந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மருத்துவத்துறையின் புதிய செயலாளராக கு.செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சிவராசு , கோவை வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி அவின் பொதுமேலாளராக
இருந்த அபிராமி திருச்சி டிஆர்ஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

வணிக வரித்துறை முதன்மை செயலாளர் / ஆணையராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆவின் நிறுவனத்தின் ஆணையராக இருந்த பிரகாஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டின் முதன்மை செயலாளர் பிரதாப் யாதவ் மாற்றப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக பிரதாப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.